கிரிக்கெட்

பஞ்சாப்புக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டோனி கூறியது என்ன?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்தாடியது.

தினத்தந்தி

அபுதாபி,

ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த 3 தோல்விகளை எதிர்கொண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று பஞ்சாப் அணியை பந்தாடியது. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 6 ஆம் இடத்தில் உள்ளது. சென்னை அணியில் மோசமான பார்ம் காரணமாக விமர்சனத்திற்கு உள்ளான ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி 83 ரன்களை குவித்து அசத்தினார். அதேபோல், மற்றொரு துவக்க வீரர் டூபிளஸிஸ் தனது அசத்தல் ஆட்டத்தை நேற்றும் வெளிப்படுத்தினார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டோனி பேசியதாவது:- சிறு சிறு விஷயங்களை சரியாக செய்தோம். எங்கள் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்தோம். வாட்சன் வலைப்பயிற்சியில் நன்றாகவே செயல்பட்டார். அவருக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அவ்வளவுதான். டு பிளெசீஸ் தனது ஷாட்கள் மூலம் பந்துவீச்சாளர்களை குழப்பும் திறன் பெற்றவர். இருவரும் நன்றாக விளையாடினர். அடுத்து வரும் போட்டிகளிலும் நன்றாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது