கிரிக்கெட்

சுரேஷ் ரெய்னாவிடம் ஆட்டோகிராப் வாங்க மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்

சுரேஷ் ரெய்னாவிடம் ஆட்டோகிராப் வாங்க மைதானத்திற்குள் அவரது ரசிகர் நுழைந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

கான்பூர்,

கான்பூர் கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ்-ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட் செய்த குஜராத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து பேட் செய்த டெல்லி 19.4 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. முன்னதாக டெல்லி அணி பேட் செய்து கொண்டிருந்த குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னாவின் தீவிர ரசிகர் ஒருவர், களத்தில் புகுந்ததால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. 4 வது ஓவரின் போது, திடீரென ரெய்னா என்று எழுதப்பட்டு இருந்த ஜெர்சி அணிந்து இருந்த ரசிகர் ஒருவர், பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் புகுந்தார். ரெய்னாவை நோக்கி வந்த அந்த ரசிகர் ரெய்னா முன்னால் மண்டியிட்டு ஆட்டோகிராப் வேண்டினார். அப்போது ரெய்னாவும் கள நடுவரும் அவரை மீண்டும் பார்வையாளர்கள் பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

இதற்கு முன் தெண்டுல்கர், தோனியிடம் ஆட்டோகிராப் வாங்க அவரது ரசிகர்கள் மைதானத்திற்கு புகுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடைபெற்ற சில நிமிடங்களில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரெய்னாவின் ரசிகர்கள், ரெய்னாவை தோனி, தெண்டுல்கர் ஆகியோருடன் ஒப்பிட்டு புகழத்தொடங்கினர். நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் லயன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...