கிரிக்கெட்

தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது: ரிஷப்பண்ட்

தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றது.

தினத்தந்தி

ராஜ்கோட்,

ராஜ்கோட்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் இரண்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் , 3-வது -வத் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நாங்கள் பேசினோம்.அதற்கு ஏற்ற முடிவு கிடைத்து விட்டது. டாஸ் பற்றி நாம் பேசலாம். ஆனால் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே பொதுவாக வெற்றி பெறும். தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா அவருக்கு உறுதுணையாக நிலையாக நின்று ஆடினார். இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்