கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் தீபாவளி வாழ்த்து...!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரை லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெடில் ஐதராபாத், டெல்லி அணிகளுக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் அமோக ஆதரவை அவர் பெற்றுள்ளார். இந்திய சினிமா பாடல்களுக்கு தனது குடும்பத்துடன் நடனமாடும் வீடியோவை வார்னர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகள்களுடன் நடனம் ஆடியபடி அவர் வெளியிடும் வீடியோ இணையத்தில் பலமுறை வைரலாகி உள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் சிறப்பானதாக அமையட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்