சென்னை,
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் பாராட்டியுள்ளார்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை இந்திய அணி முற்றிலும் புதிய நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது என்று அவர் கூறினார். இந்திய ரசிகர்களின் அன்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பே இந்திய அணியை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றதாகவும் ரிச்சர்ட்ஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய ரசிகர் ஆதரவு இருப்பதாகவும், ரசிகர்களின் ஆதரவும் வீரர்களின் அர்ப்பணிப்பும் இந்திய அணியை உலக கிரிக்கெட்டின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.