கிரிக்கெட்

"விமர்சனங்களுக்கு பதிலளிக்க தேவையில்லை... - ரியான் பராக்

ரியான் பராக், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 90 ரன்கள் குவித்தார்.

புதுடெல்லி,

சமீபகாலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 90 ரன்கள் குவித்து மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு, கேப்டன் ரியான் பராக் 50 பந்துகளில் 90 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தார். இறுதிக்கட்டத்தில் டொனோவன் பெரைரா 14 பந்துகளில் 47 ரன்கள் விளாச, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. இருப்பினும், இந்த இமாலய இலக்கை எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதற்கிடையில், போட்டிக்கு பின் தன் மீதான விமர்சனங்கள் குறித்து ரியான் பராக் பேசினார். விமர்சனம் செய்பவர்களுக்கோ அல்லது அது குறித்துப் பேசுபவர்களுக்கோ தான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். சமீபத்தில் ரியான் பராக் இ-சிகரெட் பயன்படுத்திய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்காக போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.