மும்பை,
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இதன் மூலம் தாய்நாட்டில் இந்த தொடரை வென்ற முதல் அணியாகவும், தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றிய முதல் அணியாகவும் இந்தியா சாதனை படைத்தது. மேலும், இந்த கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணியாகவும் இந்தியா திகழ்கிறது.
இதற்கிடையில், தன்னுடைய உடனடி திட்டம் குறித்து சூர்யகுமார் பேசும்போது, “வீட்டிற்கு சென்று நல்ல உணவு சாப்பிட்டு இரண்டு நாட்கள் நன்றாக தூங்கி ஓய்வு எடுப்பேன். அதன் பிறகு ஐபிஎல் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்பை தொடங்குவேன்,” என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.