கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட முடிவு?

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடுத்த ஆண்டு (2021) ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தான் வந்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து எல்லா அம்சங்களையும் பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்கிறது. அத்துடன் பாகிஸ்தானுக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி திரும்புவதற்கு தங்களால் முடிந்த உதவியை செய்வோம் என்றும் கூறியுள்ளது. 2005-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...