லண்டன்,
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில நிமிடங்களே இருந்தநிலையில் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரு டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி திட்டமிட்டது.