image courtesy: @englandcricket 
கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட இங்கிலாந்து அணி

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.

தினத்தந்தி

லண்டன்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 4ம் தேதி ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் 2024 -2025 சீசனுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான புதிய ஜெர்சியை இங்கிலாந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சி ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்