கிரிக்கெட்

20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதலிடம்

20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதலிடம் பிடித்துள்ளார்.

தினத்தந்தி

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் 33 வயதான டேவிட் மலான் 4 இடங்கள் முன்னேறி மொத்தம் 877 புள்ளிகளுடன் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அரைசதம் உள்பட 129 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த உயர்வு கிடைத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (869 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 4-வது இடத்திலும், விராட் கோலி 9-வது இடத்திலும் உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்