நியூயார்க்,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமைப் பண்பு குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:-
எந்த ஒரு கேப்டனுக்கும் அணியில் வெவ்வேறு விதமான வீரர்களை கையாள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு வீரரும் தனித்தனி சிந்தனை, செயல்முறைகளை கொண்டுள்ளனர். ஒரு கேப்டனாக அதை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
கேப்டனாக நான் கற்று கொண்ட மிகப்பெரிய விஷயம், ஒவ்வொரு வீரருக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை அணியின் ஒரு அங்கமாக, முக்கியமான வீரராக உணர வைக்க வேண்டும் என்பது தான். வீரர்கள் ஏதேனும் பிரச்சினையுடன் அணுகினால் அதை கவனமுடன் கேட்டு பிரச்சினைக்கு சிறந்த தீர்வைக் கொடுத்து உதவ வேண்டும். கேப்டனாக மட்டுமின்றி ஒரு வீரராகவும் நான் எந்த சூழலுக்கும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.