கிரிக்கெட்

2வது டெஸ்ட்; விதிகளை மீறிய ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ரசிகர்கள் இன்றி சவுதம்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் மருத்துவ பாதுகாப்புடன் இரு அணிகளும் விளையாடி வரும் நிலையில், அணியின் பாதுகாப்பு விதிகளை ஆர்ச்சர் மீறிய குற்றத்திற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அவர் 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்திடுவார். அதனுடன், கொரோனா பரிசோதனை அவருக்கு 2 முறை நடத்தப்படும். அவரது சுய தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைவதற்குள், பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என முடிவு வர வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது