கிரிக்கெட்

கோலியை சந்திக்கும் ஆவலில் உயிர் பாதுகாப்பு வளைய விதியை மீறிய ரசிகர்

இந்திய கேப்டன் கோலியை சந்திக்க உயிர் பாதுகாப்பு வளைய விதியை மீறிய ரசிகர் பின்னர் கோலி கூறியதற்கேற்ப திரும்பி சென்றார்.

தினத்தந்தி

ஆமதாபாத்,

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு 50 சதவீத அளவிற்கே ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பெரிய அளவில் விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றன.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வேறு யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த சூழலில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்தபொழுது அவரை சந்திப்பதற்காக ஆவலுடன் ரசிகர் ஒருவர் உள்ளே சென்றார்.

ஆனால் சற்று தொலைவிலேயே அவரை கண்ட கோலி, ஒரு சில அடிகள் பின்வாங்கி சென்றார். பின்பு ரசிகரை திரும்பி செல்லும்படி கேட்டு கொண்டார். கோலியின் வேண்டுகோளை ஏற்று, தன் தவறை உணர்ந்த ரசிகர் திரும்பி சென்றார். இதனை கவனித்த ரசிகர்கள் கூட்டம் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தது.

எனினும், ரசிகர் ஒருவர் விதிகளை மீறியது பற்றி கிரிக்கெட் கூட்டமைப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு, அந்த ரசிகர் யார் என்று கண்டறிவோம். ஒவ்வொருவரின் பாதுகாப்பும் அதிமுக்கியம். அதனால், இந்த விவகாரம் பற்றி தீவிர கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்