கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா காயம்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா காயமடைந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி-விதர்பா (ஏ பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று விதர்பா அணியின் 2-வது இன்னிங்சில் டெல்லி அணிக்காக விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 5-வது ஓவரில் வீசிய பந்து ஒன்று விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் பேடில் பட்டது. அவுட் கேட்டு அப்பீல் செய்த இஷாந்த் ஷர்மா வழுக்கி தரையில் விழுந்தார். இதில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை பெற்ற 31 வயதான இஷாந்த் ஷர்மா வலி தாங்க முடியாமல் வெளியேறினார். அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து உடனடியாக விவரம் தெரியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த காயத்தால் அவர் அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்விக்குறி எழுந்து இருக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்