கிரிக்கெட்

அதிவேக அரைசதம்: ஷிவம் துபே சாதனை

அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே அரைசதம் அடித்து அசத்தினார்.

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது . முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 18.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது .

இப்போட்டியில் அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பிய நிலையில் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.இதன்மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் துபே 3வது இடத்திற்கு முன்னேறினார். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்