வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .
இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .
அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது ,50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது .
வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 77 ரன்கள் குவித்தார் .
இதனை தொடர்ந்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது