கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

கவுகாத்தி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது.

அடுத்ததாக இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்திய வீரர் ரிஷாப் பான்டுக்கு இது முதல் ஒரு நாள் போட்டியாகும். இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாட உள்ள சந்தர்பால் ஹேம்ராஜ் மற்றும் ஓஷேன் தாமஸ் ஆகியோருக்கும் இது முதல் ஒரு நாள் போட்டியாகும்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்