பார்ல்,
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
இந்திய ஒரு நாள் போட்டி அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா தசைப்பிடிப்பால் விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தொடங்கிய முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் தொடங்கியது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் :-
இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர்குமார், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான், பவுமா (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், கேசவ் மகராஜ், மார்கோ ஜான்சென், பெலக்வாயோ, இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.