கிரிக்கெட்

முதலாவது டி20: அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில்76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. #IndiaVsIreland

டப்ளின்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக அருகில் உள்ள அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் இன்று நடந்தது. கேரி வில்சன் தலைமையிலான அயர்லாந்து அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுக்கும் விதத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் கேரி வில்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே இந்த ஜோடி அதிரடி காட்டினர். அதிரடியில் கலக்கிய இருவரும் விரைவில் தங்களது அரைசதத்தினை பூர்த்தி செய்தனர். இந்நிலையில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவான் 74(45) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 10(6) ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து தோனியும் 11(5) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இந்நிலையில் சதம் அடிப்பார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 97(61) ரன்களில் சாஸ் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக பீட்டர் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அயர்லாந்து அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், அயர்லாந்து அணியின் சார்பில் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஜேம்ஸ் ஷனோன் ஆகியோர் களமிறங்கினர். இதில் பால் ஸ்டிர்லிங் 1(3) ரன்னில் பும்ரா பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பால்பிர்னி 11(14) ரன்னில் சாஹல் பந்து வீச்சில் தோனி மூலம் வெளியேற்றப்பட்டார். அதிரடியின் கலக்கிய ஜேம்ஸ் ஷனோன் 29 பந்துகளில் தனது அரை சதத்தினை பூர்த்தி செய்தார். அடுத்து பந்து வீச வந்த குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரிலே சிமி சிங்-கின் விக்கெட்டை கைப்பற்றினார்.

அதிரடியில் கலக்கிக் கொண்டிருந்த ஜேம்ஸ் ஷனோன் 60(35) ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். அதன்பின் பந்து வீச வந்த சாஹல், அயர்லாந்து அணியின் கேப்டன் கேரி வில்சன் 5(9), கெவின் ஓ பிரையன் 10(9) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். அடுத்து களமிறங்கிய ஸ்டூவர்ட் தாம்சன் 12(8) ரன்கள்களும், ஸ்டூவர்ட் பாய்ன்டிர் 7(9) ரன்களும் எடுத்திருந்த நிலையில் யாதவ் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டனர். அடுத்ததாக ஜார்ஜ் டாக்ரெல் 9(6) ரன்களில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார்.

இறுதியில் அயர்லாந்து அணியில் பாய்ட் ராங்கின் 5(13) ரன்களும், பீட்டர் சாஸ் 2(8) ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை