Image Courtesy: @BCBtigers  
கிரிக்கெட்

முதல் டி20 போட்டி; வங்காளதேசம் - இலங்கை அணிகள் இன்று மோதல்

வங்காளதேச அணியில் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த தொடரில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

சிலெட்,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சிலெட் நகரில் இன்று நடக்கிறது.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவும் என்பதால் இரு அணி வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டுவார்கள்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரை பகிரங்கமாக விமர்சித்த இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதால், இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை சாரித் அசலங்கா வழிநடத்துகிறார். உள்நாட்டில் வங்காளதேசம் எப்போதும் வலுவானது என்பதால் இலங்கைக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

வங்காளதேச அணியில் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த தொடரில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு