கிரிக்கெட்

முதல் டி20 போட்டி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

இன்று இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

சவுத்தம்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. .இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.  இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த டெஸ்டில் ஏற்பட்டதோல்வியில் இருந்து மீண்டு இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். டெஸ்டில் ஆடிய விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் 2-வது போட்டியில் அணியுடன் இணைய உள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு