கிரிக்கெட்

முதல் டி20 போட்டி: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்... களமிறங்குவாரா சூர்யவன்ஷி?

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடக்கிறது.

செஸ்டர் லீ ஸ்டிரிட்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி அந்த நாட்டுக்கு எதிராக முதலாவது டி20 போட்டியில் இன்று மோதுகிறது.

முதல் டி20 போட்டி

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடக்கிறது.

அயர்லாந்து தொடரில் பெரிய அளவில் இந்திய வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. இதனால் இந்திய இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எற்பட்டுள்ளது.

நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 30 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 12-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.