Image Courtesy: AFP  
கிரிக்கெட்

முதல் டி20 போட்டி; நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்...!

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தினத்தந்தி

நேப்பியர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இதில் முதலாவது டி 20 ஆட்டம் நேப்பியரில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 11.40 மணிக்கு தொடங்குகிறது.

ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க வங்காளதேச அணி கடுமையாக முயற்சிக்கும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்