கிரிக்கெட்

முதல் அணி... 19 ஆண்டு கால ஐபிஎல் ரெக்கார்டை உடைத்த ஸ்ரேயாஸ் ஐயர் படை

பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 19 ஆண்டுகளில் எந்தவொரு அணியும் செய்யாத ஒரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி சரித்திரம் படைத்துள்ளது.

ஐபிஎல் 2026 சீசனில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, தான் விளையாடிய முதல் 6 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத (Unbeaten) முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.(கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து)

இதற்கு முன்பு பல ஜாம்பவான் அணிகள் தொடர் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், முதல் 6 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவாமல் ஒரு சீசனைத் தொடங்குவது இதுவே முதல் முறையாகும்.

Also read:சர்ச்சையில் சிக்கிய விம்பிள்டன் சாம்பியன்... 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்பு?

பஞ்சாப் அணியின் இந்த இமாலய வளர்ச்சிக்கு அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே சரிசமமாக கைகொடுத்து வருகின்றன. தொடக்க வீரர்கள் அதிரடியான அடித்தளம் அமைப்பதும், மிடில் ஆர்டரில் வீரர்கள் நங்கூரம் பாய்ச்சி ஆடுவதும் அணிக்கு பலம் சேர்க்கிறது. டெத் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் இந்த சீசனில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.

தொடர்ச்சியான இந்த வெற்றிகளின் மூலம் 11 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த அசுர வேகத்தைப் பார்க்கும்போது, இந்த முறை பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவது மட்டுமின்றி, கோப்பையை வெல்லும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.