லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக் கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இங்கி லாந்து- நியூசிலாந்து அணி இடையிலான முத லாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் எமிலியோ கே (8) வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் பந்தில் கேட்ச் ஆனார். ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப் பட்டது.
மழை நின்றதும் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பேட்டர்கள் தடுமாறினர். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலை சரியாக பயன்படுத்திக் கொண்ட நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்டர்களை மிரள வைத்தனர். பென் டக்கெட் (19 ரன்), ஜேக்கப் பெத்தேல் (6 ரன்), ஜோ ரூட் (1 ரன்), ஜாமி சுமித் (1 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (12 ரன்) வரிசையாக நடையை கட்டினர். இதற்கு மத்தியில் துணை கேப்டன் ஹாரி புரூக் மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார்.அவர் 56 ரன்கள் (71 பந்து, 10 பவுண்டரி) விளாசியதால் இங்கிலாந்து அணி கவுரவமாக மூன்று இலக்கத்தை கடந்தது. இடையில், போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் ஒரு மணி நேரம் தடைப்பட்டது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 39.4 ஓவர்களில் 140 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சா ளர் கைல் ஜாமிசன் 14 ஓவர்களில் 62 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்தும் திணறியது. வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் வீசிய ஒரே ஓவரில் டிவான் கான்வே (1 ரன்). கேன் வில்லியம்சன் (0), ரச்சின் ரவீந்திரா காலியானார்கள். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 61 ரன் எடுத்தது.