Image Courtesy: Cricket Australia twitter 
கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 3 வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 271/2

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

ராவல்பிண்டி,

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 476 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது.

டேவிட் வார்னர் 68 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 97 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். லபுஸ்சேன் 69 ரன்னுடனும், ஸ்டீவன் சுமித் 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது