கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 34/1

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்துள்ளது.

தினத்தந்தி

ஆன்டிகுவா,

ஆன்டிகுவாவில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது.

திரிமன்னே (76 ரன்), ஒஷாடா பெர்னாண்டோ (91 ரன்) அரைசதம் அடித்தனர். 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 149.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 476 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 103 ரன்களும், டிக்வெல்லா 96 ரன்களும், பெர்னாண்டோ 91 ரன்களும், திரிமன்னே 76 ரன்களும் சேர்த்தனர். இதன்படி வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற 375 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது,

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணியில் ஜான் கேம்பல் 11 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் பெர்த்வொயிட் 8 ரன்களும், பொன்னர் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற இன்னும் 341 ரன்கள் எடுக்க வேண்டும். போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு