Image Courtesy: @ICC  
கிரிக்கெட்

முதல் டெஸ்ட் போட்டி; பாகிஸ்தானுக்கு 450 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியா அணி தரப்பில் 2வது இன்னிங்சில் உஸ்மான் கவாஜா 90 ரன்களும், மிட்செல் மார்ஷ் 63 ரன்களும் எடுத்தனர்.

தினத்தந்தி

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 487 ரன்களும், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 271 ரன்களும் எடுத்தன.

இதையடுத்து 216 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 63.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா தரப்பில் உஸ்மான் கவாஜா 90 ரன்களும், மிட்செல் மார்ஷ் 63 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 450 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு