image courtesy:PTI 
கிரிக்கெட்

ஆஸி.முன்னாள் வீரர் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த டெஸ்ட் அணி.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்

அந்த அணியில் அதிகபட்சமாக 5 ஆஸ்திரேலிய வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

தினத்தந்தி

சிட்னி,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹெய்டன் 21-ம் நூற்றாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த பிளெயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

அந்த அணியில் அதிகபட்சமாக 5 ஆஸ்திரேலிய வீரர்களை தேர்வு செய்துள்ளார். அத்துடன் 2 இந்திய வீரர்களையும் அணியில் சேர்த்துள்ளார்.

மேத்யூ ஹெய்டன் தேர்வு செய்த 21-ம் நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் அணி:-

அலஸ்டர் குக், டேவிட் வார்னர், ஜாக்ஸ் காலிஸ், பிரையன் லாரா (கேப்டன்), விராட் கோலி, விவிஎஸ் லட்சுமணன், ஆடம் கில்கிறிஸ்ட் (விக்கெட் கீப்பர்), ஷேன் வார்னே, பேட் கம்மின்ஸ், பிரட் லீ, ஜேம்ஸ் ஆண்டர்சன்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்