கிரிக்கெட்

கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசிய அர்ஜுன் தெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பாராட்டு...!

அர்ஜுன் தெண்டுல்கரை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ பாராட்டியுள்ளார் .

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி கேமரூன் க்ரீனின் அதிரடி அரைசதம் மற்றும் திலக் வர்மா, இஷன் கிஷானின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வண்ணம் இருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.

மும்பை அணிக்காக கடைசி ஓவரை சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் அவுட் மற்றும் கேட்ச் விக்கெட் உட்பட 2 விக்கெட்டுகளையும் இழந்து ஐதராபாத் அணி 178 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அர்ஜுன் தெண்டுல்கரை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ பாராட்டியுள்ளார் .

அவர் கூறுகையில் ,

அர்ஜுன் தெண்டுலகர் அழுத்தத்தை அழகாக கையாண்டு . அந்த கடைசி ஓவரில் வெறும் 4-5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, ஐபிஎல்லில் தனது முதல் விக்கெட்டைப் பெற்றார். அவருக்கு வாழ்த்துகள், ஆனால் அது நடக்குமுன் நான் கூறியிருந்தேன், இறுதியில் என்ன நடந்தாலும், அவர் கடைசி ஓவரில் பந்துவீசிய அனுபவம் - இது ஒரு நேர்மறையான ஒன்று - அவரது ஆட்டத்தை வலிமைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்,". அவர் அந்த வைட்-லைன் யார்க்கர் வீச முயன்றார் , அவர் அதை நன்றாக செய்தார். அவரது ஆட்டம் மேம்படும். என கூறியுள்ளார் 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்