கோப்புப்படம் 
கிரிக்கெட்

"அனில் கும்ளேயின் சாதனையை அஸ்வின் முறியடிக்கலாம்": பார்த்தீவ் படேல்

இந்திய அணியில் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான பார்த்தீவ் படேல் அஸ்வினின் சாதனை குறித்து புகழ்ந்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், நடந்துமுடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெடுகளை வீழ்த்தியதுடன், கபில் தேவின் டெஸ்ட் விக்கெட் சாதனையை முறியடித்துள்ளார்.

கபில் தேவ் 434 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் தற்போதுவரை 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் அஸ்வினின் சாதனை குறித்து புகழ்ந்துள்ள இந்திய அணியில் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான பார்த்தீவ் படேல் அஸ்வினின் சாதனை குறித்து கூறும்போது,

"அஸ்வின் உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களுள் ஒருவர் ஆவார். நான் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008-ல் இருந்ததில் இருந்து கவனித்து வருகிறேன். அவர் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். அப்போது எங்கள் அணியில் இருந்த இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனுடன் நேரத்தை செலவழித்தார்.

அஸ்வின் டெஸ்டில் 436 விக்கெட்டுகளை வீழ்த்தியது என்பது மிகப்பெரிய மைல்கல். அவர் இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் விளையாடினால், இந்திய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ளேயில் சாதனைக்கு அருகில் வரவோ, அல்லது முறியடிக்கவோ முடியும். ஆனால் அது மிக நீண்ட பயணம் தான்". இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறினார்.

அஸ்வின் இந்தியாவுக்காக 85 டெஸ்டில் 24.26 சராசரியுடன் 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 30 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஏழு பத்து விக்கெட்டுகள் அடங்கும். டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய அனில் கும்ளே 132 டெஸ்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்