கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மரணம்

இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மரணம் அடைந்தார்.

மும்பை,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்றிரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் ஆடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அவரது தலைமையில் இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து (1-0) மற்றும் வெஸ்ட் இண்டீசில் (1-0) டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்தது. அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு