image courtesy: AFP 
கிரிக்கெட்

நடக்கவே சிரமப்படும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்... வைரலாகும் வீடியோ... ரசிகர்கள் வேதனை

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி நடக்க சிரமப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த வீரராக போற்றப்பட்டார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும் ஆவார். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வினோத் காம்ப்ளி, அதில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

இதனிடையே தற்போது 52 வயதான வினோத் காம்ப்ளி அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் வினோத் காம்ப்ளி தற்போது நடக்க சிரமப்படும் வீடியோ வெளியாகி ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்  பைக்கின் மீது சாய்ந்தபடி இருக்கும் அவரை சிலர் தாங்கிப் பிடித்தபடி அழைத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதனைக்கண்ட ரசிகர்கள் வினோத் காம்ப்ளியின் நிலையை பார்த்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்