கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் மறைவு

மும்பை அணியின் கேப்டனாக இருந்து ரஞ்சி கோப்பையை சுதிர் நாயக் வென்று கொடுத்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சுதிர் நாயக் (வயது 78) மும்பையில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் சமீபத்தில் வழுக்கி விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நினைவு திரும்பாமலேயே நேற்று மரணம் அடைந்தார்.

1974-ம் ஆண்டில் அவர் இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அத்துடன் அவர் மும்பை அணியின் கேப்டனாக இருந்து ரஞ்சி கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டி தலைவராக இருந்த அவர் வான்கடே மைதானத்தின் பராமரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்