லண்டன்,
தென் ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் டயன் தல்யார்ட். தற்போது 47 வயதாகும் இவர், தென் ஆப்பிரிக்காவின் பார்டர் அணிக்காக விளையாடியுள்ளார். பின்னர் இங்கிலாந்துக்கு வந்து கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். இந்த நிலையில், தல்யார்ட் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தொடுத்தார். 2002 முதல் 2012 வரை 150 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இதையடுத்து, இந்த புகார் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தல்யார்ட் மீதான 19 வழக்குகளிலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு அறிவித்ததோடு 18 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்தது. 18 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்த தல்யார்ட்க்கு 3 குழந்தைகள் உள்ளனர். சட்ட ரீதியான காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை.