கிரிக்கெட்

உலகக் கோப்பையுடன் அனுமான் கோவிலில் இந்திய அணி… வைரலாகும் வீடியோ!

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

ஆமதாபாத்,

டி20 உலக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார், தலைமை பயிற்சியாளர் கவுதம் கபீர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் ஆமதாபாத்தில் உள்ள பிரபலமான அனுமான் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு சூர்யகுமார் யாதவ் தனது கைகளில் டி20 உலகக் கோப்பையை ஏந்தியபடி அனுமான் சுவாமி முன் சிறப்பு பூஜை செய்தார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

இந்தியாவின் பெருமையான வெற்றியை கடவுளின் பாதத்தில் சமர்ப்பித்து வணங்கிய அணியின் செயலுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை முன்னிட்டு கோவில் சுற்றுப்புற பகுதிகளில் காவல்துறையினர் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.