image courtesy:PTI 
கிரிக்கெட்

சூதாட்ட செயலி விளம்பரம்; ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவை அமலாக்கத்துறை விசாரித்திருந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பந்தய செயலியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் விசாரணைக்காக ஷிகர் தவானுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஓன்எக்ஸ்பெட் (1xBet) என்ற சட்டவிரோத பந்தய செயலியுடன் தொடர்புடைய விசாரணையின் ஒரு பகுதியாக தவானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷிகர் தவான் சில ஒப்புதல்கள் மூலம் இந்த செயலியுடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையின்போது இந்த செயலியுடனான அவரது தொடர்புகளைப் புரிந்துகொள்ள அமலாக்கத்துறை விரும்புகிறது.

சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவை அமலாக்கத்துறை விசாரித்திருந்தது. இதனிடையே மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து ஆன்லைன் கேமிங்கைத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து