கோப்புப்படம்  
கிரிக்கெட்

ஓமனுக்கு எதிரான ஆட்டம்: பும்ராவுக்கு ஓய்வு வழங்க திட்டம் - வெளியான தகவல்

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

துபாய், ,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 9 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி மட்டும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஹாங்காங், ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 19ம் தேதி ஓமனை சந்திக்கிறது. இந்நிலையில், ஓமனுக்கு எதிரான ஆட்த்தில் இந்திய முன்னணி வீரரான ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பும்ரா ஓமனுக்கு எதிரான போட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டால் அடுத்த சூப்பர் 4 சுற்றின் போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் வருவார் என்பதாலும் அவருக்கு ஓய்வுளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரின் போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி இருந்தார். பும்ரா ஓய்வெடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்