புதுடெல்லி,
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன்மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை சேர்த்தது பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், டெஸ்ட் போட்டியில் சிறப்புடன் விளையாட இருவரும் தவறி விட்டனர். தவான் 2 இன்னிங்சில் விளையாடி 16 மற்றும் 16 ரன்கள் என எடுத்துள்ளார். ரோகித் 11 மற்றும் 10 ரன்களே எடுத்துள்ளார்.
வெளிநாட்டில் ரோகித் மற்றும் தவான் விளையாடியது பற்றிய வரலாறு ஒன்றும் மெச்சத்தக்க வகையில் இல்லை. அவர்கள் வெளிநாட்டுக்கு விளையாட செல்லும்பொழுது மற்றும் இந்தியாவில் விளையாடும்பொழுது உள்ள பதிவுகளை கவனியுங்கள்.
அதனால் வெளிநாடுகளில் சிறப்புடன் விளையாடும் முரளி விஜய் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரையே நீங்கள் சார்ந்திருக்கும் நிலை உள்ளது என அவர் கூறியுள்ளார்.
#FirstTestmatch, #SouravGanguly