Image Courtesy : AFP 
கிரிக்கெட்

மும்பையில் சச்சின் விக்கெட்டை வீழ்த்திய அக்தர் ; கேள்விகேட்ட கங்குலி : கொந்தளித்த ரசிகர்கள்- சுவாரசிய நிகழ்வு

சச்சின் விக்கெட்டை வீழ்த்தியதால் ரசிகர்கள் கொந்தளித்த சம்பவத்தை அக்தர் நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் (2008) மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஒன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலியும் மும்பை அணியை சச்சினும் வழிநடத்தினார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 68 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீராக களமிறங்கிய சச்சின் பாகிஸ்தான் வீரர் ஷோயிப் அக்தர் பந்துவீச்சில் முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு மைதானத்தின் பைன் லெக் திசையில் பில்டிங் செய்து கொண்டு இருந்த அக்தரை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கடுமையாக சாடினர். இதை பார்த்த கொல்கத்தா அணியின் கேப்டன் கங்குலி அக்தரை அழைத்து மிட் விக்கெட் திசைக்கு வந்து நிற்குமாறு அழைத்து உள்ளார். மேலும் கங்குலி அக்தரிடம் " சச்சினை யார் உங்களை அவுட்டாக்க சொன்னார்கள் , அதுவும் மும்பையில் " என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை ஷோயிப் அக்தர் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...