கிரிக்கெட்

தலைமை பயிற்சியாளரை மாற்றிய அயர்லாந்து அணி... கேரி வில்சன் நியமனம்

கேரி வில்சன், அயர்லாந்து அணிக்காக 292 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டப்ளின்,

அயர்லாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேரி வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

292 சர்வதேச போட்டிள்

கேரி வில்சன், அயர்லாந்து அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி, 292 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதன்பிறகு பயிற்சியாளராக தனது பயணத்தை தொடங்கினார்.

2022-ம் ஆண்டு முதல் அயர்லாந்து தேசிய அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவர், தற்போது தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகளுக்கு அயர்லாந்து அணி தயாராகி வரும் நிலையில், கேரி வில்சன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மாலன் ஒரு மாதம் ஒத்துழைப்பு

சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த ஹென்ரிச் மாலன், அடுத்த ஒரு மாத காலம் அணியுடன் இருந்து கேரி வில்சனுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவார். அதன் பின்னர், ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இருந்து கேரி வில்சன் முழுநேர தலைமை பயிற்சியாளராக தனது பணியை தொடங்குவார்.