சென்னை,
ஐபிஎல் 2026 சீசன் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முதல் போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் வருகிற 28-ம் தேதி மோத உள்ளன.
இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெங்களூரு அணி வீரர்களிடம் விராட் கோலி பேசி இருக்கிறார். இந்த சீசன் இன்னும் கடினமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“கடந்த 2-3 ஆண்டுகளாக நாம் கடினமாக உழைத்ததாலேயே 2025ல் கோப்பையை வெல்ல முடிந்தது. இந்த சீசன் இன்னும் கடினமாக இருக்கும். மற்ற அணிகளும் மிகவும் பலமாக உள்ளன. இந்த நாட்களை வீணாக்கக் கூடாது. பயிற்சியின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. இந்த இரண்டரை மாதங்களில் நம்முடைய 120 சதவிகிதம் உழைப்பை அணிக்காக கொடுக்க வேண்டும்,” என்றார்.