கிரிக்கெட்

பெங்களூரு அணியில் கோரி ஆண்டர்சன்

பெங்களூரு அணியில் கோரி ஆண்டர்சன் இடம் பெற்றார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நிலே (ஆஸ்திரேலியா) காயத்தால் விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சனை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஐ.பி.எல். தொழில் நுட்ப கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிக்காக ஆடியுள்ள 27 வயதான கோரி ஆண்டர்சனை ஜனவரி மாதம் நடந்த ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. இப்போது மாற்று வீரர் அதிர்ஷ்டத்தில் மறுபடியும் ஐ.பி.எல்.-ல் ஆட இருக்கிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்