கிரிக்கெட்

பெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்

பெண்கள் பந்து வீச்சில் இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம் பிடித்தார்.

தினத்தந்தி

பெண்களுக்கான ஒரு நாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை மந்தனா (797 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி (756 புள்ளி) 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் சாட்டர்த்வெய்ட் (755 புள்ளி) 3-வது இடத்திலும், இந்திய கேப்டன் மிதாலிராஜ் (713 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 2 இடங்கள் அதிகரித்து 730 புள்ளிகளுடன் மறுபடியும் நம்பர் ஒன் அரியணையில் ஏறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசென் (723 புள்ளி) 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் சனா மிர் 3-வது இடத்திலும் (718 புள்ளி) உள்ளனர்.


தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு