கிரிக்கெட்

ராகுல் டிராவிட்டுக்கு இன்று பிறந்த நாள் : ரசிகர்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இன்று 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

பெங்களுரூ,

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ராகுல் டிராவிட்டுக்கு கிரிக்கெட் வீரர்களும், அவரது ரசிகர்களும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வி.வி.எஸ். லக்ஷ்மன், ஹர்பஜன் சிங் மற்றும் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உள்ளிட்டோரும் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

1973- ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பிறந்த ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 509 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ளார். அர்ஜூனா விருது, ஐசிசி சிறந்த வீரர் (2004) பத்ம ஸ்ரீ (2004), பத்ம பூஷன் (2013) ஆகிய விருதுகளையும் ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.

ராகுல் டிராவிட் பிறந்த நாள் தொடர்பான பதிவுகள் டுவிட்டர் டிரெண்டிங்கில் முன்னிலை வகிக்கின்றன. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக உள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...