கிரிக்கெட்

தினேஷ் கார்த்திக் பேட்டிங் குறித்து ஹர்பஜன்சிங் புகழாரம்

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தினேஷ் கார்த்திக் கில்லாடியாக திகழ்கிறார் என ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடும் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடியாக திகழ்கிறார். நான் தேர்வாளராக இருந்தால் ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு அவரை நிச்சயம் தேர்வு செய்வேன் என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்