கிரிக்கெட்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் ஹர்திக் பாண்ட்யா

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கோரியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, சமீபத்தில் காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பாண்ட்யா கூறிய சில கருத்துக்கள் சர்ச்சையானது. தனது பெற்றோரிடம் தான் பழகி வரும் பெண்கள் குறித்து சொன்னதாகவும், தனது பாலியல் உறவுகள் குறித்து கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பல விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

இந்த நிலையில், தனது கருத்துக்கு ஹர்திக் பாண்ட்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்ட்யா கூறியிருப்பதாவது ''எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த விதத்திலாவது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த உள்நோக்கத்துடனும் காயப்படுத்தவில்லை'' என்று கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கேட்டுள்ள போதிலும், அவர் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு