கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் ஹர்திக் பாண்டியா

தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார்.

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.

இந்த நிலையில், கடந்த போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக விளையாடாத மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இன்று மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். அவர் வலைப்பயிற்சியில் முழுவீச்சில் பந்துவீசியும், பேட்டிங் செய்தும் தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார்.