கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்: ஹர்மான்பிரீத் கவுர் அசத்தல் கேட்ச்

மேற்கிந்திய தீவுகளுடனான ஒருநாள் போட்டியின் போது இந்திய வீராங்கனை ஹர்மான்பிரீத் கவுர் பிடித்த கேட்ச் வீடியோ வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

அண்டிகுவா,

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டம் அண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் ஜெயித்த மேற்கிந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டெய்லர் 88 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய வீராங்கனை ஏக்தா பிஷ்ட் வீசிய பந்தில் சிக்சர் விளாசி 94 ரன்கள் எடுத்தார். அதே போல் பிஷ்ட் வீசிய அடுத்த பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டார் டெய்லர்.

இதனை லாங் ஆன் திசையில் பவுண்டரி லைனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஒற்றைக் கையால் அசத்தல் கேட்ச் பிடித்து டெய்லரின் சத கனவை முறியடித்தார்.

இந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு